சிசிடிவி கேமிராக்களை ஆஃப் செய்துவிட்டு அரசாங்க செம்மரங்கள் கடத்தல்!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் இருந்த 1,1/2 டன் செம்மரம் மாயம்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூரில் சந்தனக்கட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குடோனில் தீபிடித்துக் கொண்டது. அதில் 122 டன் சந்தன கட்டைகள் எரிந்து போனதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி எ.ராமன் தலைமையிலான விசாரணை குழு அளித்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றும் வழக்கை முடித்து வைத்தது.
குறிப்பாக குடோனினுடைய வாட்ச்மேனின் உறவினர் பையன் விடுமுறைக்கு வந்திருந்த போது அவன் சந்தன கிடங்கல் கூட்டாஞ் சோறு செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தே இவ்வளவு பெரிய விபத்துக்கு காரண என்று முடித்துவைத்தனர்.

சுமார் 1000 டன் சந்தன மரங்களை களவாடிவிட்டு அதை மறைக்கவே இந்த நாடகம் என்றெல்லாம் அப்போதைய புலனாய்வு இத்ழ்களில் செய்திகள் வெளியானதை அமுக்கிவிட்டதாகவும் பேசப்பட்டதுண்டு.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில் அமைந்துள்ள சந்தன மர கிடங்கில் கடந்த 18ம் தேதி இரவு நேரத்தில் ஒன்றரை டன் எடை கொண்ட சுமார் 55 செம்மரக் கட்டைகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கண்டத்திலேயே மிக முக்கியமான சந்தன மர கிடங்காக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சந்தன மரக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இந்தக் கிடங்கில் சுமார் 100 டன்னுக்கு மேலாக சந்தன மரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.அதோடு செம்மர கட்டைகளும் பல நூறு டன்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தன மரக்கடங்கில் கடந்த பதினெட்டாம் தேதி நள்ளிரவு நேரத்தில் வன அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆப் செய்துவிட்டு ஒன்றரை டன் செம்மர கட்டைகளை கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பதினெட்டாம் தேதி ஏலகிரி மலையில் கோடை விழா நடந்தபோது வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனத்துறை அமைச்சர் மாவட்டத்தில் இருக்கும்போது இத்தகைய சூழல் என்பது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

admin
