16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பிரியாணி மாஸ்டர் கைது – போக்சோ சட்டத்தில் நடவடிக்கை!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்ததாக கூறப்படும் 22 வயது பிரியாணி மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக அவரது பெற்றோர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் கோட்டைத் தெரு பகுதியைச் சேர்ந்த மகமுத்கானின் மகன் ரஹீம் (22), பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், சிறுமியும் ரஹீமும் காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ரஹீம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்ததாக கூறப்படும் பிரியாணி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
