ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்!
செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, 5½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி அமுதா (45), வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அமுதாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த 5½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திமிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
