ஆளுங்கட்சிக்கு சாதகமாகும் பாமகவின் 20 ஆயிரம் வாக்குகள்? விசிக கூட்டணியில் உள்ளதால் ரகசிய வழிகாட்டுதல்?!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதனால், பாமகவின் வாக்குகள் யாருக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
இரு தொகுதிகளிலும் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கூறிவிட முடியாது. இருப்பினும், மதுராந்தகம் வடக்கு தமிழக அரசியல் களத்துடன் தொடர்புடைய தொகுதி என்பதால், அங்கு பாமகவுக்கு ஓரளவு வாக்கு பலம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மதுராந்தகத்தில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளும், தாராபுரத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகளும் என மொத்தம் 20 ஆயிரம் வாக்குகள் பாமக ஆதரவாளர்களிடம் இருக்கலாம் என்ற அரசியல் கணக்கும் முன்வைக்கப்படுகிறது.
இவை அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கைகள் அல்ல.
பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்திருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்று கூற முடியாது.
தங்களது தொகுதியின் வேட்பாளர்கள், சட்டப்பேரவை நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் அரசியல் சூழலைப் பொறுத்து அவர்கள் வாக்களிக்கக்கூடும்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் சௌமியா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் பாமக ஆதரவாளர்களின் வாக்கு முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
தலைமை எந்தவிதமான வழிகாட்டுதலை வழங்குகிறது என்பதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பாமகவின் தலைமை ரகசியமாகக் கட்டைவிரலை உயர்த்தியிருப்பதுடன், தமது சொந்தங்களுக்கும் அதே வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
எனினும், இதனை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பாமகவின் அதிகாரப்பூர்வ நடுநிலை அறிவிப்புக்கும், அதன் ஆதரவாளர்களின் தனிப்பட்ட வாக்கு முடிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே இந்த இடைத்தேர்தலில் புதிய அரசியல் கணக்கை உருவாக்கியுள்ளது.
பாமகவின் வாக்குகள் ஆளுங்கட்சியை நோக்கி நகரும் பட்சத்தில், அது ஆளுங்கட்சியின் வெற்றியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தை தெரிவிக்க உதவும்.
ஆக மொத்தத்தில்,பாமக போட்டியிடாததும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காததும், இடைத்தேர்தல் களத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக பாமக ஆளுங்கட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் ஆதரவு என்று வெளிப்படையாக சொல்ல முடியாத நிலைக்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அது யாதெனில் தமிழக வெற்றி கழகத்துடன் விடுதலை சிறுத்தை கட்சிகள் கூட்டணி இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஓகே ஓகே

admin
