இராணிப்பேட்டை வருவாய் அதிகாரிகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி!

இராணிப்பேட்டை வருவாய் அதிகாரிகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வருவாய் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

  அரக்கோணம் தாலூகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ரமேஷ், அரக்கோணம் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசன்,

தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் எத்திராஜ், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேனர் ஏந்தி இருசக்கர வாகனத்தில் சென்றனர்கள்.

  இந்த பேரணி தாலூகா அலுவலகத்தில் துவங்கி காந்தி ரோடு, சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம், மார்கெட், பழனிப்பேட்டை, கிரிபீல்ஸ்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை, விண்டர்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.