டாஸ்மாக் படுத்தும் பாடு! காண்ணா நீ தூங்கடா! நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி!

டாஸ்மாக் படுத்தும் பாடு! காண்ணா நீ தூங்கடா! நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி!

ஜி.குலசேகரன்,

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலையை ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்த சாலையை பயன்படுத்தி தான் திருவண்ணாமலை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த முக்கிய பிரதான சாலையில் மாலை நேரத்தில் மது போதை ஆசாமி ஒருவர் மது குடித்து விடு குப்புற படுத்து உறங்கினார்.

   இதனால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது இதனை அறிந்த போக்குவரத்து காவலர் நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர்.

   அந்த வழியாக வந்த போலிஷ் போக்குவரத்து பேட்ரோல் வண்டியை நிறுத்தி அந்த போதையா சாமி அட்ராசிட்டியில் ஈடுபட்டார். பின்னர் வண்டியில் இருந்து போலீஸ் இறங்கி வந்து போதை ஆசாமியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.

   இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.