கேட்பாரற்றுக் கிடந்த 36 கிலோ கஞ்சா!
ஜி.குலசேகரன்,
ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலின் பின்பக்கம் உள்ள பொது ஜன பெட்டியில் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஷீன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
தகவலின் பேரில் 6 பேர் கொண்ட பாதுகாப்பு படை போலீசார் ஆம்பூர் அருகே பொதுஜன பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லக்கேஜ் வைக்கும் ரேக்கில் ஐந்து பைகளில் பண்டல்களாக 36 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் எடுத்து வந்தனர்.
மேலும் இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

admin
