திமுக தேர்தல் அறிக்கை குழு!பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

திமுக தேர்தல் அறிக்கை குழு!பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

ஜி.குலசேகரன்,

  வேலூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது - முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

 வேலூரில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்டு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்டு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  இதில் அமைச்சர்கள் பி,டி.ஆர்.பழனிவேல், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்கங்கள், தொழில் துறையினர், வியாபாரிகள் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

 இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன்,ஈஸ்வரப்பன், தேவராஜ், வில்வநாதன்,கிரி உள்ளிட்டவர்கள் பங்கு பெற்றனர்.

  பின்னர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.