இராணிப்பேட்டையில் போதை பொருள்!
கு.அசோக்!
நீதிமன்ற வழிகாட்டுதல் படி 13 டன் குட்கா ஹான்ஸ் போன்ற வஸ்துக்களை காவல்துறையினர் பூமியில் புதைத்து அழித்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், குட்கா போன்ற போதை வஸ்துக்கள் குவிந்துக் கிடக்கின்றன.
அவை வாகனங்களில் கடத்தப்பட்டு விற்பனைக்காக குடோன்கள் மற்றும் கடைகளில் சப்ளை செய்யப்படுகிறது.
அவற்றில் சின்ன பகுதியை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு இருந்த 15 டன் போதை வஸ்துகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாலாஜா மற்றும் அரக்கோணம் தக்கோலம் ஆகிய இரண்டு பகுதிகளில் காவல்துறையினரின் முன்னிலையில் அழித்தனர்.
டாட்டா ஏசி வேன்கள் மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் மூட்டை மூட்டைகளாக கொண்டு வந்து பூமியில் பள்ளம் தோண்டி கொட்டி புதைத்தனர்.
பிறகு வந்து தோண்டி எடுத்துவிடப் போகிறார்கள் அய்யா?

admin
