கன்னியாகுமரியில் - ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்!
குமரேசன் தோவாளை தாலுக்கா செய்தியாளர்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பெருமை கலாச்சாரம் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா துறை, கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியாளர் மற்றும் விவேகானந்த கல்லூரி சார்பாக பொங்கல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்நாடு வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாணவ மாணவியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடினார்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணிய செய்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கிராம புறங்களுக்கு அழைத்து சென்று பாரம்பரிய முறைப்படி நடைபெறும் பொங்கல் இடும் விழா நிகழ்ச்சியை காணச் செய்வார்கள்.
அதன்படி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மாவட்ட சப் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொங்கல் விழாவை காண வந்த வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கழுத்தில் மாலை அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார்.
பின்பு மாணவிகள் வண்ணக் கோலமிட்டு கல்லூரி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொங்கல் பானையில் கல்லூரி மாணவிகள் வெளி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், வில்லுப்பாட்டு நையாண்டி மேளம் ஒயிலாட்டம் பரதநாட்டியம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் உறி அடி போட்டி, சேர் சுற்றுதல், வடம் இழுத்தல் மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலையில் கரகம் எடுத்து ஆடியது அனைவரையும் மகிழ்வித்தது.
பொங்கல் விழா நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லூரி மாணவ மாண மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை அலுவலர் காமராஜ் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன், முதல்வர் டிசி மகேஷ் உட்பட ப்ரஃபஸர், பணியாளர்களும், ஆசிரியர்கள் மற்றும் மாணவனைகள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். இதனால் நாளை கொண்டாடும் பொங்கல் திருவிழா இன்று விவேகானந்த கல்லூரியில் கலை கட்டியது.

admin
