பெண் வீட்டுக்குள் நுழைந்த ஐபிஎஸ் அதிகாரி!

 பெண் வீட்டுக்குள் நுழைந்த ஐபிஎஸ் அதிகாரி!

த.நெல்சன்,

 ஒரு பெண்ணின் வீட்டுக்குள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நுழைந்து ரகளை செய்து போலீசில் சிக்கிக் கொண்டார்.  துபாயில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கு கொளத்தூர் மக்காரம் தோட்டம் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் 40 வயது பெண் ஒருவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இவர் வாடகையும் செலுத்தாமல், வீட்டையும் காலி செய்யாமல் இருந்துள்ளார்.

   இதனால் வீட்டு உரிமையாளர் தரப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்து வீட்டை காலி செய்யும்படி மிரட்டி தாக்கியுள்ளனர்.

  இதில் காயமடைந்த பெண் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துபாயில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினரான ஐஆர்எஸ் அதிகாரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி உட்பட 6 பேர் பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர்.