முழக்கங்களை எழுப்பிய மாணவிகள்!
கு.அசோக்,
காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது இந்திர செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
இதனை காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் துவங்கி வைத்தார்.
இதில் சாலைவிதிகளை மதிப்போம் தலைக்கவசம் அணிவோம் என மாணவ,மாணவிகள் திரளானோர் உறுதிமொழி ஏற்றுகொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர்.
சாலைவிதிகளை மதிப்போம் தலைக்கவசம் அணிவோம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய வண்ணம் காங்கேய நல்லூர் சாலையில் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அக்சிலியம் மகளிர் கல்லூரி அருகே விழிப்புணர்வு ஊர்வலம் நிறைவடைந்தது.

admin
