பள்ளிக்கூடத்தில் துடப்பம் கூட இல்லையா?கடுப்பான ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை செய்தியாளர்களுடன் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார் - வேலப்பாடியில் உள்ள பள்ளியில் சுத்தம் செய்யாமல் மாணவர்களை கீழே அமர வைத்ததால் ஆட்சியர் தலைமை ஆசிரியரை அழைத்து சுத்தம் செய்ய உத்தரவு பள்ளியை கூட சுத்தம் செய்யாமல் என்ன செய்கிறீர்கள் என கேள்விரெழுப்பினார்.
வேலூர் மாநகராட்சியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் 48 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என பத்திரிகையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விடியற்காலை முதல் திடீர் ஆய்வு செய்தார்.
முதலில் சத்துவாச்சாரியில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தில் உணவு தயாரிக்கும் முறைகள் அவைகள் எவ்வாறு மாணவர்களுக்கு எடை போட்டு பகிர்ந்தளிக்கபடுகிறது, வேன் மூலம் எடுத்து செல்வது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்தார்.
அத்துடன் சித்தேரி அரசினர் ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியில் ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தனர்.
மாணவர்களுக்கு ஆட்சியரே உணவை பரிமாறினார் அதன் பின்னர் வேலப்பாடி பாட்டை தெருவில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் சென்றார்.
அங்கு பள்ளியே சுத்தம் செய்யாமலும் தூய்மையில்லாமல் இருந்தது பின்னர் துடப்பம் எங்கே என கேட்டு அவர் முன்னிலையில் பெருக்க சொன்னார்.
தலைமை ஆசிரியர் அழைத்து பள்ளியை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென கண்டித்தார் பின்னர் மாணவர்களுடன் உணவு உண்டனர்
பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநகராட்சி பகுதிகளில் 48 பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தபடுகிறது இது எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்தியாளர்களும் சென்று உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு வழங்கும் இடம் வரையில் ஆய்வு செய்தேன் உணவுகள் தரமாக உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் 3250 மாணவ,மாணவிகள் பயன்பெறுகின்றனர் என்று கூறினார்
பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டுமென அறிவுறுத்தியும் சுத்தமில்லாத இடத்தில் வேலப்பாடி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களை அமர வைத்திருந்தார் ஆட்சியரே நேரில் பார்த்து துடப்பம் கூட பள்ளியில் இல்லையா என அதிரடித்தார் இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.