பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ரீல்ஸ் வெளியீடு! ஆம்பூர் அருகே 25 வயது இளைஞர் கைது!

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ரீல்ஸ் வெளியீடு! ஆம்பூர் அருகே 25 வயது இளைஞர் கைது!

செய்தி: ஜி. குலசேகரன்,

 மாவட்டம்: ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டு வந்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞரை ஆம்பூர் கிராமிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் கார்த்திகேயன் (25) என்பவர், தனது செல்போன் மூலம் பெண்களின்25-year-old man arrested near Ambur for releasing morphed photos of women on Reels! புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் கார்த்திகேயனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, பெண்களின் புகைப்படங்களை மாற்றியமைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்களின் புகைப்படங்களை அவர்களது அனுமதியின்றி மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது அவர்களின் தனியுரிமைக்கும் கண்ணியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.