எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸுக்கு வாழ்த்து... செய்தியாளர்களுடன் இணக்கமாக இருங்கள்
செய்தி: ம.பா கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் புதிதாக உதயமாகும் எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸுக்கு livelook.in சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருப்பத்தூர் நகரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்துக்கும், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும்.
அதேநேரத்தில், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக சிற்றுண்டி மற்றும் உணவு கேண்டின் வசதியை சுகாதாரமாகவும், முறையாகவும், தரமாகவும் பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் எழுந்துள்ள வேண்டுகோள்.
அந்த வேண்டுகோளை சமூக அக்கறையுடன் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
சமீபத்தில் கேண்டின் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு புரிதல் இல்லாத நிலை காரணமாக சிறிய சலசலப்பு உருவாகி, பின்னர் காவல்துறையினர் மூலம் சமரசமாக முடிவுக்கு வந்ததாகவும் அறிகிறோம்.
இனி இதுபோன்ற சலசலப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நிர்வாகம் முன்கூட்டியே கவனம் செலுத்துவது நல்லது என்பதும் பொதுமக்களின் அன்பான வேண்டுகோள்.
மேலும், எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸின் பிரம்மாண்டமான கட்டமைப்பும், அதன் வேகமான வளர்ச்சியும் சுற்றியுள்ள பிற ஜவுளி நிறுவனங்களிடையே கூட ஒரு விதமான பிரமிப்பையும், கவனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பிற ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்குள் ஆட்களை அனுப்பி புகைப்படங்கள் எடுத்து வருவதாகவும் எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸ் தரப்பினர் தெரிவித்ததாக அறிகிறோம்.
அந்த அளவுக்கு தங்களது பிரம்மாண்டமான ஜவுளி நிறுவனத்தின் மீது பிற நிறுவனங்களுக்கும் ஆர்வமும், பிரமிப்பும் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே!
அதேபோல், பொதுமக்கள் சார்ந்த தகவல்களை அறிந்து செய்தியாளர்கள் அணுகும்போது, அவர்களுக்கு உரிய மரியாதையும் ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டும்.
செய்தியாளர்களிடம் அநாகரிகமாகவோ, அவமரியாதையாகவோ நடந்து கொள்ளாமல், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துடன் இணக்கமான அணுகுமுறையை நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் எங்களது அன்பான வேண்டுகோள்.
புதிய தொழில் முயற்சி வெற்றியடையட்டும்...திருப்பத்தூர் நகரில் எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸ் மூலம் புதிய ஜவுளிப் புரட்சி மலரட்டும்!
மீண்டும் ஒருமுறை எஸ்.வி. டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகத்துக்கு livelook.in-ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

admin
