ரூ.100 கோடி புகார் வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் இல்லை – உயர் நீதிமன்றம் அதிரடி!

ரூ.100 கோடி புகார் வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் இல்லை – உயர் நீதிமன்றம் அதிரடி!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த மனுவில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி தெரிவிக்கிறது. 

வழக்கின் விசாரணை தொடர்பாக அன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது தரப்பு கோரிக்கை வைத்தது.

ஆனால், அரசுத் தரப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தது. இதையடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

கைது செய்யக்கூடாது என்ற உத்தரவு வேண்டுமெனில், முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும், அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.