காலில் கூட விழுகிறேன் சீல் வைக்காதீங்க சார்! ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் கெஞ்சல்!
ம.பா.கெஜராஜ்,
முன்னாள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி அவ்வப்பொழுது செய்தியாவது வாடிக்கையாகிவிட்டது.அப்படியிருக்க தற்போது அவரை மையப்படுத்தி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் சார் ப்ளீஸ்...காலில் கூட விழுகிறேன் சீல் வைக்காதிங்க, வெளியில் தெரிந்தால் அசிங்கமாயிடும், ஒரு மாசம் டைம் கொடுங்க பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார்.
ஆனால் அதை அங்கிருந்தவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இதனால் மதுவந்தி தொடர்ந்து கெஞ்சி கூத்தாடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளனன.
இதன் உண்மை தன்மை என்ன என்று விசாரிக்கப்பட்டது.
பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேற்படி மதுவந்தி வீடு வாங்குவதற்காக கடந்த 2016 ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ருபாய் கடன் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் சில மாதங்கள் தவணை கட்டியவர் தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இழுத்தடித்துள்ளார்.
எனவே மேற்படி பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வட்டிப்பணம் கட்ட சொல்லி நோட்டிஸ் எல்லாம் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் மதுவந்தி பணம் கட்டமால் இழுத்தடித்து வந்திருக்கிறார்.
பொறுமையிழந்த வங்கி தரப்பு வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதற்கெல்லாம் மசியாத மதுவந்தி, பைனான்ஸ் நிறுவனத்திடம் அடாவடியாக பேசியிருக்கிறார்.
அப்படியிருக்க இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் சார்பிலொ சென்னை அல்லிகுளம் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதனடிப்படையில், வழக்கறிஞர் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டுச் சாவி இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி சீல் வைக்கப்பட்ட போது தான் மதுவந்தி கெஞ்சி கூத்தாடி சீல் வைக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார். அதை வங்கி அலுவலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இதே மதுவந்தி தனியார் பள்ளியில் சீட்டு வாங்கித் தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

admin
