Ubi கட்டண முறைக்கு எதிர்ப்பு! வேலூர் வணிகர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மின்னஞ்சல்!
செய்தி:கு.அசோக்,
வேலூர் மாவட்டம், வேலூரில் UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டண நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கை நடைபெற்றது.
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மண்டல தலைவர் ஞானவேல் தலைமை வகித்தார்.
UPI மூலம் நடைபெறும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே, வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கட்டண நடைமுறையை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதியமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார், அமீன் அகமது ஆலியார், அருண்பிரசாத், பிச்சாண்டி, அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பு: மத்திய அரசின் தற்போதைய விளக்கப்படி, UPI-யில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொதுவான கட்டணம் விதிக்கப்படவில்லை; P2P பரிவர்த்தனைகள் இலவசமாகவும், ₹2,000 வரை உள்ள merchant payments மற்றும் சிறு வணிகர்களுக்கான பல பரிவர்த்தனைகளும் இலவசமாகவும் தொடர்கின்றன.

admin
