தூத்துக்குடிக்கு தூக்கியடிக்கப்பட்ட குடியாத்தம் டிஎஸ்பி! காரணம் என்ன?

தூத்துக்குடிக்கு தூக்கியடிக்கப்பட்ட குடியாத்தம் டிஎஸ்பி! காரணம் என்ன?

ம.பா.கெஜராஜ்,

விடிய விடிய ஆய்வுக்கூட்டம், மணல் கொள்ளையர்களுடன் கூட்டு, உயர் அதிகாரியின் சப்போர்ட் என ஆல் ரவுண்டராக இருந்து வந்ததாக கூறப்பட்ட குடியாத்தம் டிஎஸ்பி அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் கண்டம் விட்டு கண்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.

என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் சற்றே பிரச்சனைக்குரிய பகுதியாக வர்ணிக்கப்படும். ஆனாலும் சமரசம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தும் பகுதியாக அது இருந்து வருகிறது. இருந்தாலும் ஒரு சில சுயலாப காவல் அதிகாரிகளால் குற்றச் சம்பவங்களுக்கு வழி வகுக்கப்பட்டு வந்தது.

 அந்த வகையில், கடந்த ஆண்டு டி.இராமசந்திரன் என்பவர் டிஎஸ்பி ஆக பணியமர்த்தப்பட்டார். அவர் பதவியேற்றுக் கொண்டது முதல் அவரது முகாம் அலுவலகத்தை ஒரு குறிப்பிட்ட பெண் நபர் ஆக்கிரமித்துக் கொண்டு பிஸினஸ் ஸ்பாட்டாக அதை மாற்றி வைத்திருந்தாக பேசப்பட்டது.

   இத்தனைக்கும் அந்த நபர் அன் அக்கவுண்ட் என்று சொல்லுவார்களே அப்படிப்பட்டவராம்.

 அவர் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு குடியாத்தம், பேர்னாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்துவதற்கு ரூட்டு போட்டுக் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.

   அதே நேரத்தில் இந்த டிஎஸ்பியோ நேர்மை என்கிற பெயரில் காவல் அதிகாரிகளை முகாம் அலுவலகத்துக்கு வரவழைத்து விடிய விடிய ஆய்வுக்கூட்டம் நடத்திக்கொண்டு அவர்களை வாகன சோதனை நடத்தவோ, ரோந்து பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தும் வந்ததாக செய்திகள் வெளியானது.

   அப்படியும் மீறி கடத்தல் மணல் லாரிகளை பிடித்த அதிகாரிகளுக்கு மெமோக்களை வழங்கி அதிரடித்தார் என போலீசார் கதறியதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்சனையால் ஆய்வுக்கூட்டத்தின் போதே சாந்தி என்கிற இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் சென்றதாக தகவல்கள் வெளியானது.

   அதற்கு கூட அவரை ஓபன் மைக்கில் மிரட்டியதாவும் தகவல்.

இதையெல்லாம் உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவரை ஒன்று செய்யமுடியவில்லையாம். அதாவது தற்போதுள்ள ஒரு உயர் அதிகாரி சந்தன மாவட்டத்தில் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு இவர்தான் பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொடுத்தாராம்.

    இப்படிச் சொல்லிக் கொண்டு  குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட காவல் அதிகாரிகளுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதே பந்தாவில் அரசியல்வாதிகளிடம் வாலாட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

   மேலும் புகார்தாரர்களின் நலனில் அக்கறை காட்டுவதேயில்லையாம்.

  இதனால் பொறுத்துப் பார்த்த மக்கள் பிரதிநிதிகள் அரசின் பார்வைக்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

   அதன் பிறகு விசாரித்த போது அண்ணாத்தையின் நேர்மையும் அவரது அன் அக்கவுண்டில் உள்ளவரின் வசூல் வேட்டை பற்றின விவரமும் தெரியவந்ததாம்.

   இந்நிலையில் அவர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதையறிந்த குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட பலர் இனிப்புகளை வழங்கி மகிழ்சியை வெளிப்படுத்தினார்களாம்.