ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி!

ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி!

செய்தி.ஜி குலசேகரன் ,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், வீட்டு மின் இணைப்பு வழங்குவதற்காக கூகுள் பே (GPay) மூலம் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போர்மேன் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் பணிகளை மேற்பார்வை செய்து வரும் சிவக்குமார், வீட்டு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.10,000 பெற்றதாக திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஆய்வாளர் கௌரி ஆகியோர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, ஜி.பே. மூலம் லஞ்சம் பெற்ற புகாரில் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மின்சாரம் என்பது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள நிலையில், மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.