களவு போகும் சமையல் சிலிண்டர்கள்! கைவரிசை காட்டும் மர்ம நபர் யார்?
ஜி.குலசேகரன்,
இரண்டு திருமண மண்டபத்தில் ஒரே நபர் சிலிண்டர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு காவல் நிலையத்தில் புகார் எடுக்க மறுப்பு.
வேலூ£,¢ சேண்பாக்கம் சர்வீஸ் சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. அதில் சேன்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு சமையல் செய்வதற்காக சிலிண்டர் எடுத்து வரப்பட்டது. பின்பு திருமணம் முடிந்து மண்டபத்தை காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது சமையல் அறையில் இருந்த ஒரு சிலிண்டர் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
மண்டபத்தில் வைத்திருந்த சிசிடிவி காட்சியை மண்டப உரிமையாளர்கள் ஆய்வு செய்து பார்த்தபோது, அடையாளம் தெரிந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த நபர் யாரிடமோ செல்போனில் மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டே மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் அவர் தனது பேச்சைத் தொடர்ந்துகொண்டே அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை லாவகமாகத் தனது வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதே போன்று அந்த நபர் கடந்த 25 ஆம் தேதி வேலூர் காவலர் திருமண மண்டபத்தில் இருந்து சிலிண்டரை திருடி சென்றுள்ளார்.
தொடர்ந்து சிலிண்டர் திருடும் இந்த திருடனை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரின் கோரிக்கையாக உள்ளது.
பட்டப்பகலில் மிக லாவகமாக எரிவாயு சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
