அஜித்பவார் விமான விபத்தை விசாரிக்க சொல்லும் செல்வ பெருந்தொகை!

அஜித்பவார் விமான விபத்தை விசாரிக்க சொல்லும் செல்வ பெருந்தொகை!

கு.அசோக்,

அஜித் பவர் விமான விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி.

  தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரயில் மூலமாக காஞ்சிபுரம் நோக்கி செல்லும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தடைந்தார்.

  அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சால்வை மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவர் விமான விபத்தில் மரணம் அடைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உரிய ஆய்வு மற்றும் விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

  மேலும் தமிழகத்தில் 77 மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றப்பட்டு இளைஞர்களை களம் இறக்கியதாகவும் குறிப்பாக நான்கு பகுதிகளில் பெண்களை களம் இறக்கியதாக தெரிவித்தார்.

 இவர் சொன்ன பிறகுதான் விசாரிக்கின்றனரா?