அனைத்து மதத்தினர் காணும் வகையில் புனிதர்களின் கண்காட்சி! அனுமதி இலவசம்!

அனைத்து மதத்தினர் காணும் வகையில் புனிதர்களின் கண்காட்சி! அனுமதி இலவசம்!

கு.அசோக்,

  வேலூரில் கத்தோலிக்க திருச்சபையால் அருளீக்கங்கள் கண்காட்சி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் நடக்கிறது அனைத்து மதத்தினரும் கண்டுகளிக்க ஏற்பாடு

 வேலூர்மாவட்டம்,வேலூரில் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ரெவரண்ட் ராய் லாசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வேலூரில் உள்ள தூய விண்ணேற்பு அன்னை பேராலய வளாகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர்களின் அருளிக்கங்கள் கண்காட்சி ஜனவரி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் கண்காட்சியானது நடைபெறும்.

 இதில் புனிதர்களின் 1500 அருளீக்கங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகிறது.

 அதில் புனிதர்களின் தலைமுடி எலும்புகள் உடைகள் உடல் உறுப்புகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுகிறது.

 அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவைகள் எடுத்து காட்டாக அமைய வேண்டுமெனவும் இந்த அருளீக்கங்கள் இறைவனை நினைவு கூறும் ஒன்றாக தான் இறைவனோடு ஒன்றினைய இது நடத்தபடுகிறது.

 இந்த புனிதர்களின் பரிந்துரை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தும். மேலும் புனிதர்களான அன்னை தெரேசா, டான்பாஸ்கோ,தேவ ஆசீர்வாதம்,உள்ளிட்ட 1500 புனிதர்களின் அருளீக்கங்கள் இக்கண்காட்சியில் வைக்கபடுகிறது.

 இறையின் மகிமையை உணருவதற்காக இது சமூகங்களிலும் நாட்டிலும் அமைதி நிலவிடவும் தூய்மை சுகம் பெறவும் பக்தியை நோக்கவும் இவை வைக்கபடுகிறது.

 இக்கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்கலாம் அனுமதி இலவசம் இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் எல்லா மதத்தினரும் இதனை கண்டுகளிக்கலாம்.

 இது போன்று ஒவ்வொரு நாளும் கல்வி,சுகாதாரம் ,பொருளாதார மேம்பாடு இளைஞர்கள் நல்வழிப்படுத்துதல் பெண்கள் முன்னேற்ற போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடக்கவுள்ளது.

  இது சாதி மத மொழி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

 பேட்டியின் போது பேராலய நிர்வாகி ரோசாரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இக்கண்காட்சிக்காக விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.