கோவை விமான நிலையத்துக்கு வரும் தங்க பிஸ்கஸ்ட்டுகள்!

கோவை விமான நிலையத்துக்கு வரும் தங்க பிஸ்கஸ்ட்டுகள்!

அன்பு.ராஜன்,

 கோவை விமான நிலையத்துக்கு தங்க பிஸ்கஸ்ட்டுகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது.   

 இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

 அவர்களில் 2 பயணிகளின் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது. இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.