தேர்தல் வந்தால் அவரவர் சாமார்த்தியத்தை பொருத்தது... நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
கு.அசோக்,
மேல்பாடியில் பொங்கல் தொகுப்பு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை மக்களுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் - நாங்கள் மாணவ,மாணவியருக்கு மாதம் ஆயிரம் மகளிர்களுக்கு ஆயிரம் கொடுக்கிறோம் பொங்கலுக்கு 3 ஆயிரம் கொடுக்கிறோம் - தேர்தல் வந்தால் அதெல்லாம் அவரவர் சாமார்த்தியத்தை பொருத்தது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர்மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்பாடியில் தமிழக அரசின் சார்பில் பொங்கலுக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ அரிசி சர்க்கரை,கரும்பு வேட்டி சேலை ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகள் மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், துணை மேயர் சுனில்,காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன்,கூட்டுறவு சங்க இணை பதிவாளர் குண ஐயப்ப துரை உள்ளிட்டோரும் திரளான மக்களும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி விழாவில் பேசினார்.
மகளிர்களுக்கு மாதம் 1000 வழங்குகிறோம், மாணவருக்கு மாதம், ரூ.1000,மாணவியருக்குமாதம் ரூ.1000 இந்த பொங்கலுக்கு ரூ.3 ஆயிரமும் முதல்வர் கொடுக்கிறார்.
பள்ளிகளில் பிள்ளைகளுக்கு காலை உணவும் அளிக்கிறோம்,தேர்தல் வந்தால் அதெல்லாம் அவரவர் சாமார்த்தியத்தை பொருத்தது. இந்த ஊர் மேல்பாடி காலனியில் தண்ணீர் கஷ்டம் என சொன்னார்கள் ஏன் என கேட்டேன் அதற்கு செலவு செய்ய வேண்டும் என்றார்கள்.
பணம் சர்க்கார் கொடுக்காவிட்டாலும் பணம் நான் தருவேன் மக்களுக்கு வேண்டிய தண்ணீரை ஏற்பாடு செய்துகொடுங்கள்.
நான் அமைச்சராக இருக்கும் வரையில் எல்லா டேம் ஆறுகளை பார்க்கும் பொருப்பு என்னுடையது.
போன தேர்தலில் சொன்னேன் இங்கு கல்லூரி கொண்டு வருவேன் என்று அதே போல் கல்லூரி கொண்டு வந்தேன், மருத்துவமனையை கொண்டு வந்தேன்.
மருத்துவமனை 100 படுக்கை மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென அமைச்சர் சுப்பிரமணியத்திடம் சொல்லியிருக்கிறேன்.
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு மருத்துவமனை திறந்துள்ளோம். பல்கலைக்கழகம் உள்ளது தேர்தல் முடிந்த பின்னர் இப்பகுதியில் சிப்காட் வரவுள்ளது மகிமண்டலத்தில் ஒரு சிப்காட் அமைக்கவுள்ளோம் இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் இந்த அரசாங்கம் நிலைக்க உங்கள் ஆதரவை கேட்டுள்ளோம் என பேசினார்.

admin
