வெங்கடாபுரத்தில் பொங்கல்!

வெங்கடாபுரத்தில் பொங்கல்!

கு.அசோக்,

வேலூரில் அரசின் சார்பில் வெங்கடாபுரம் மற்றும் வேலூர் மாநகராட்சி மண்டலம் 2 இல் பொங்கல் விழா திரளானோர் விழாவில் பங்கேற்றனர் சிலம்பாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது

  வேலூர்மாவட்டம்,வேலூர் வெங்கடாபுரத்தில் தமிழக அரசின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

   இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஜெ.இ.பாபு, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்,மேயர் ஆ.சுஜாதா ,வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன்,மண்டல குழு தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கொண்டாடினார்கள் மேலும் இதில் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது மேலும் பல்வேற்று போட்டிகளில் வென்றனர் மாணவர்களுக்கு பரிசுகள் சான்றுகள் கோப்பைகள் வழங்கப்பட்டது இது போன்று வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டிலும் இதே போல் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.