அண்ணாவிருதுக்கு நான் தகுதியுடையவன்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

அண்ணாவிருதுக்கு நான் தகுதியுடையவன்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.குலசேகரன்,

 உங்களுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்குஅண்ணா விருது... அந்தப் பெயரைத் தாங்கி இருக்கிறது. ஆகையினால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றார்நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

  இதை உங்கள் வாழ்நாள் சாதனைக்கான விருதாக எடுத்துக் கொள்ளலாமா   நீங்கள் அண்ணாவின் ஒரு தீவிரத் தொண்டர். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விருதை, முதல்வர் அவர்கள் உங்கள் இலக்கியப் பணிகளையும், சட்டமன்ற நடவடிக்கைகளையும் பாராட்டி வழங்கியிருக்கிறார். இதை உங்கள் வாழ்க்கையின் உச்சகட்ட அந்தஸ்தாகக் கருதலாமா என்ற கேள்விக்கு,

   என்னுடைய இளம் வயதில், நான் மாணவனாக இருக்கும் போதே இந்த இயக்கத்தில் (திமுக) என்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருபவன்.

   அப்போதே என்னை அண்ணா அவர்கள் கண்டு, ஒரு தோழர் கூட்டத்திலே பேசச் சொன்னார்கள். அப்போதே அண்ணா அவர்கள் நான் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தார்.

   அதற்குப் பிறகு அண்ணாவோடு இணைந்து நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆகையினால் அவருடைய பெயரால் எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு பாராட்டுக்குரிய, போற்றுதலுக்குரிய விஷயம் என்றா£.

   ¢இன்று மொழி சம்பந்தமான ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் அண்ணா பேசிய பல வார்த்தைகளைத் தணிக்கை குழுவினர்  நீக்கியிருக்கிறார்கள். இன்றும் மொழிக்காகப் போராட வேண்டிய சூழல் நமக்கு இருக்கிறதாஎன்ற கேள்விக்கு,

   வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதிலளித்தார்.  

  இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றி இப்போதே கருத்துச் சொல்ல முடியாது. படத்தைப் பார்த்து விட்டுத் தான் சொல்ல முடியும் என்றார்