பொங்கலுக்கு சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ!
கு.அசோக்,
சோளிங்கரில் பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டிகளை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினா£.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்லெட் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் இன்பச் செல்வன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டான்லி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி 139 மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் வருங்கால சமுதாயத்தின் தூண்களாக விளங்க வேண்டும். யாரால் பறிக்க முடியாதது கல்வி மட்டுமே. மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு இலக்கு வைத்துக்கொண்டு நன்கு பயின்று வரும் காலத்தில் மருத்துவர்களாக, ஆசிரியர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், பொறியாளர்களாகவும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அரசு வழங்கும் கல்விக்கான சலுகைகளை மாணவர்கள் பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
அப்போது நகர காங்கிரஸ் தலைவர் டி. கோபால், தொகுதி பொறுப்பாளர் ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

admin
