இங்கெல்லாம் சரக்குகடை வைக்கக் கூடாது... மக்கள்! பாதுகாப்பில் போலீஸ்!

இங்கெல்லாம் சரக்குகடை வைக்கக் கூடாது... மக்கள்! பாதுகாப்பில் போலீஸ்!

ஜி.குலசேகரன்,

ஆம்பூரில் புதியதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரப் பகுதிக்குட்பட்ட பெத்லேகம், ரெட்டி தோப்பு, எம்.வி.சாமி நகர்உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

  மேலும் அப்பகுதியில் பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் என பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள நிலையில், அப்பகுதியில் அரசு புதியதாக மதுபான கடையை திறப்பதாக அறிவித்தது.

 ஆகவே பொதுமக்கள் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

  இந்த நிலையில், எம்.வி.சாமி நகர் பகுதியில் திடீரென அரசு மதுபான கடை திறக்கப்பட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்து, அரசு மதுபான கடைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.