வெல்டிங் கடையில் கொள்ளை!

வெல்டிங் கடையில் கொள்ளை!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் வெல்டிங் கடை ஷாட்டரின் பூட்டை உடைத்து  மர்ம நபர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான மின் மோட்டார்கள், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை. புகாரின் பேரில் நகர போலீசார் விசாரணை.

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாஷா. இவர் கடந்த 50 ஆண்டுகளாக காதர்பேட்டை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.

   இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார். மறு தினம் காலை கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைத்து காணப்பட்டது.

  கடையில் இருந்த மின் மோட்டார்கள், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

  சம்பவம் குறித்து அன்வர் பாஷா மகன் பையாஸ் அஹமத் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்  பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடித்து சென்ற  பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும்