சிறந்த தொழிலதிபருக்கான விருதும்! இப்தார் விருந்தும்!

சிறந்த தொழிலதிபருக்கான விருதும்! இப்தார் விருந்தும்!

ஆர்.ரமேஷ்,

 சிறந்த தொழிலதிபருக்கான விருது மற்றும் இப்தார் விருந்து ஆகிய நிகழ்வுகள் இன்று 17.04.2022 மாலை நான்கு மணிக்கு துவங்குகிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், பால்நாங்குப்பத்தில் உள்ள நந்தினி மகாலில் நடைபெறும் இந்த விழாவில் சிறந்த தொழிலதிபருக்கான விருது மற்றும் பாராட்டு ஆகியவை திரு.ஜெ. வாஜித் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

   இவர் எம்9 என்கிற இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநராக உள்ளார்.

  இவருக்கு இந்த விருதை  தொழிலதிபர் திரு.வி சங்கர் அவர்கள் வழங்குகிறார். பின்னர் விபிஎஸ் அசோசியேட் தலைவர் ஏ.வி.பாலாஜி சிறப்புறை ஆற்றுகிறார்.

  இந்த நிகழ்வுக்கு பின்னர் இப்தார் நோன்பு பிரையர் நடக்கும். அதன் பின்னர் அனைவருக்கும் வெஜ் மற்றும் நான்வெஜ் விருந்து அளிக்கப்படும்.

  இதில் பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.