சிறைத்துறைக்கான பயிலகம்! அவற்றில் இருந்து என்ன கற்றீர்கள்?
கு.அசோக்,
சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது
வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் இன்று கர்நாடகாவை சேர்ந்த 8 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த 4 சிறைத்துறை அதிகாரிகள் என மொத்தம் 12அதிகாரிகள் மூன்று மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இதில் கைதியை கையாளுதல் குற்றவியல் சட்டங்கள் சிறை அதி நவீன தொலை தொடர்பு கருவிகளின் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது,
இதன் பயிற்சி நிறைவு விழாவானது சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள் சான்றுகளை வழங்கினார்.
இவ்விழாவில் திரளான சிறைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். குற்றவியல் உளவியல் சட்டங்கள் மற்றும் தடவியல் உள்ளிட்டவைகள் பயிற்சி பெற்றுள்ளனர் ஆனால் நீங்கள் அவற்றில் இருந்து என்ன கற்றீர்கள் என்பது தான் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் உள்ளது நல்ல பண்பையும் கைதிகளை சிறையில் நீங்கள் நடத்துவிதமும் நன்றாகவே இருக்க வேண்டுமென பேசினார்.

admin
