திமுகவுக்கு தபால் ஓட்டை திருட்டுத்தனமாக போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை! போலீசில் புகார்!
ஜி.குலசேகரன்,
அணைக்கட்டு தொகுதி 85 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிப்பில் திமுகவினருக்கு உடந்தையாக இருந்து திமுகவிற்கு சாதகமாக வாக்குப்பதிவு செய்ததேர்தல் நடத்தும் அலுவலரை (RO) மாற்ற வேண்டும் மற்றும் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியரமான சுப்புலட்சுமி இடம் அதிமுகவினர் புகார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 85வயதிற்கு மேற்பட்டவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவுகள் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் 461 பேர் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக படிவங்களை பெற்ற நிலையில் நேற்று பதினோராம் தேதி 223 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் செலுத்தப்பட்ட வாக்குகள் முறைகேடாக செலுத்தப்பட்டவை எனஅதிமுக சேர்ந்த அனைக்கட்டு தொகுதி வேட்பாளர் வேலழகன் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கலையரசு மற்றும் கோவிந்தசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பவர் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுப்புலட்சுமி புகார் மனுவை அளித்தார்
அதில்அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 11.04.2026 மற்றும் 12.04.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவின் போது அரங்கேறியுள்ள முறைகேடுகள் குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று (12.04.2026) நடைபெற்ற விசாரணையின் போது அணி 3 மற்றும் அணி 5 அதிகாரிகள், பாகம் 62 மற்றும் 125 ஆகிய பகுதிகளில் வாக்காளர்கள் இல்லாமலேயே வாக்குகளைப் பதிவு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் மற்றும் தபால் வாக்குபதிவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் மூலம் உண்மை என விசாரணையில் தெரியவந்ததால் அப்பணியில் இரண்டு அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்பு லெட்சுமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இரண்டு அதிகாரிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக வேட்பாளர் வேலழகன் பென்னாத்தூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது தபால் வாக்கில் முறைகேடு நடைபெற்றதால் அந்த வாக்குபதிவினை முழுமையாக ரத்து செய்து புதிய குழுக்களை அமைத்து மீண்டும் தபால் வாக்குகளை பெற அனைக்கட்டு தொகுதி தேர்தல் அலுவலர் குணசேகரனை இடமாற்றம் செய்து நியாயமாக தேர்தலை நடத்த வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்.
இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவோம் என கூறினார் பேட்டியின் போது பாமக மாவட்ட தலைவர் வெங்கடேசன் ,அதிமுக நிர்வாகி பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டிலேயே தபால் ஓட்டில் முறைகேட்டில் வேலூர் மாவட்ட சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

admin
