வீடியோ பாருங்க:- ஒரு வருஷமா எங்கே போயிருந்தீங்க:-இடைத் தேர்தல் ஸ்பெஷல்!
தி.லூக்காஸ்,
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க செல்லும் திமுகவினர் படும்பாடு சொல்லி மாளவில்லை.
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், அங்குள்ள 26 வது வார்டுக்கு திமுக வினர் வாக்காளர் பட்டியலுடன் ஓட்டுகேட்கச் சென்றனர்.
அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட வாக்காளர்கள், ஒரு வருஷமா எங்கே போயிருந்தீங்க? இப்ப மட்டும் ஓட்டுகேட்டு வந்துட்டீங்களா? இதோ இருக்கார் பாருங்க திமுககாரர் அவர்தான் எங்களை திமுக வுக்கு ஓட்டு போட சொன்னார். டாஸ்மாக் கடையை எங்க பகுதியிலிருந்து எடுப்பதாக சொன்னார்.அவரை நம்பி நாங்களும் அப்படியே வாக்களித்தோம்.
அதுக்கு பிறகு எங்க பகுதிக்கு எவரும் வரவில்லை.
இந்த வார்டுக்கு திமுகவை சேர்ந்த பெண் தான் கவுன்சிலராக உள்ளார். அவரிடம் முறையிடலாம் என்று போன் போட்டால் ஆஸ்பத்திரியில இருக்கேன், சாவு வீட்டுல இருக்கேன் என்று சொல்கிறார்.
இப்ப மட்டும் எதுக்கு ஓட்டு கேட்டு வந்தீங்க என்று கேள்வியெழுப்பிய மக்கள், மதுக்கடை இங்கு இருப்பதால் பசங்களும் பெண்களும் வெளியில் போக வர முடியலை என்று வாதிட்டார்கள்
ளவர்களுக்கு பதில் சொல்ல திணறிய திமுகவினர், இந்த விஷயம் நகர செயலாளருக்கும், மாவட்ட செயலாளருக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தெரியாதுங்க அமைச்சர் சென்னைக்கு போயிருக்கார், ஒரு நாள் டைம் கொடுங்க அவர் வந்ததும் நடவடிக்கை எடுப்பார் என்று ஒருவாரு சமாளிக்க முயன்றனர்.
இது குறித்து வெளியான வீடியோவில் மேலும் பல சங்கதிகள் உள்ளன பார்க்கவும்.