திருட்டு மின்சார இணைப்பில் முன்னாள் முதல்வருக்கு பிறந்த தின விழா! புகார் சொல்லியும் கண்டுகொள்ளாமல் பக்கோடா சாப்பிட்ட அதிகாரிகள்!
திருட்டு மின்சாரத்தில் முன்னாள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதைக்கண்ட மக்கள் உள்ளுக்குள் கொதித்தனர்.
இருந்த போதும் இதைப்பற்றி புகார் பெற்ற அதிகாரிகள் ஒருத்தர் கூட கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.
புகாரை பெற்றுக் கொண்டும் பக்கோடா சாப்பிடுவதில் இன்ட்ரஸ்ட் காட்டினர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு நேற்று 03.06.2026 ஆம் தேதி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆங்காங்கே பொது இடங்களை ஆக்கிரமித்து ஸ்பீக்கர் செட்டுகளை போட்டு இரைச்சலை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த ஸ்பீக்கர் செட்டுகளுக்காக முக்கால் பாக இடங்களில் திருட்டு மின்சாரமே பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிலும் அதனை சுற்றிலும் பல இடங்களில் திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தனர்.
அதில் சத்துவாச்சாரி அடுத்துள்ள வள்ளலார் வாட்டர் டேங்க் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து மின்சாரத்தை அப்பட்டமாக திருடி இருந்தனர்.

அதற்கு எதிர்ப்புறம் வள்ளலார் பேருந்து நிறுத்தத்தின் அருகில் ஆற்காடு ஜோதி ஸ்வீட் ஸ்டால் அருகில் முன்னாள் முதல்வருக்கு பெரிய பேனர் வைத்து அங்கு ஸ்பீக்கர் வைத்து அதற்காக மின்சாரத்தை திருடி இருந்தனர்.
இதுபோல மாநிலம் மற்றும் மாவட்டம் முழுதும் மின்சாரம் திருடப்பட்டிருந்தது.
இதனால் மின்வாரியத்திற்கு குறைந்தது மூன்று நான்கு லட்சம் ரூபாய் ஆவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
இது குறித்துமாவட்ட நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் பிசி, சட்டமன்ற உறுப்பினர்,சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், ஏ எஸ் பி, மாநகராட்சி மண்டலம் 2,அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் என பலருக்கு முறையிட்டும் எவரும் கண்டு கொள்ளாமல் பக்கோடா சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
தப்பித் தவறி ஒரு நல்லவர் இருப்பார் என்பார்களே அதுபோல சத்துவாச்சாரி ஈபியில் உள்ள செந்தில் என்கின்ற அதிகாரி துரிதமாக நடவடிக்கை எடுத்து இரண்டு மூன்று திருட்டு இணைப்புகளை துண்டித்தார்.
ஆனாலும் கூட சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கையும் பதிவு செய்யவில்லை .
இந்த திருட்டு மின்சாரத்தினால் பல உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்தது. அதையும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லை என்றாலும் கூட சவுண்ட் சர்வீஸ் காரர்களை யாவது பிடித்திருக்கலாம்.
ஏனோ அதைக் கூட அதிகாரிகள் செய்யவில்லை.
ஆகவே இது குறித்து ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் உதவியை நாடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளப் பணத்தில் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமென்று சமூக நல விரும்பிகள் விரும்புகின்றனர்.
அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள்.
என்ன செய்வது மக்களுக்கு. போராத காலம்.
துரத்தி விட்டதும் சரி வந்து புகுந்து இருப்பதும் சரி, எல்லாம் ஒன்றாகத்தான் உள்ளது.
விளங்கிடும்.

admin
