சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சராகிறார் உதயநிதி! அமைச்சர் எ.வ.வேலு வரவேற்பு!

ம.பா.கெஜராஜ்,
முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும் சினிமாதயாரிப்பாளரும் கதாநாயகனுமான உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார்கள்.
உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு சிறப்பு செயலாக்க திட்டத்துறை (Minister for Special Implementation Schemes) வழங்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு பெரம்பலூரில் செய்தியாளகளிடம் கூறியதாவது:- உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பது குறித்து கேட்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார்.
அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை.
என்று அவர் கூறினார்.