வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!

வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!

கு.அசோக்,

 வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு குடோனில் வைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஆகியவைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆட்சியர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி இருப்பு வைக்கப்பட்ட அறையின் சீலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து ஆய்வு செய்தார்.

  இதில் 3500 வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைசீட்டு இயந்திரங்கள் சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்கள் போன்றவற்றை இன்று பார்வையிட்டார் அவருடன் அரசு அதிகாரிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.