பைக்கை தொட்டு பார்த்ததற்கே திருட்டு பட்டமா? எஸ்கேப் ஆனவரை ஓடிப் பிடித்த போலீசார்!
செய்தி: ஆர். ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றதாகக் கூறி, ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரைச் சேர்ந்த சந்தோஷ் (28) என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சந்தோஷை போலீசார் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டதாகவும், காவல் நிலையத்துக்கு வர விரும்பாமல், வாகனத்தைத் தொட்டுப் பார்த்ததற்காகவே தன்னைப் பிடித்ததாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்துடன் வந்தபோது, அது யாருடைய வாகனம் என்றும் எங்கிருந்து எடுத்தார் என்றும் உடனடியாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து போலீசார் ஆலோசித்ததாகக் கூறப்படும் நிலையில், சந்தோஷ் காவல் நிலையத்திலிருந்து திடீரென ஓட்டம் பிடித்துள்ளார். அவரைப் பிடிக்க போலீசாரும் துரத்திச் சென்றனர். அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாகனத்தைத் திருட முயன்றதாகக் கூறி பொதுமக்கள் தாக்கியதும், காவல் நிலையத்திலிருந்து அவர் ஓடியதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்தோஷ் உண்மையில் வாகனத்தைத் திருட முயன்றாரா, அல்லது வாகனத்தைத் தொட்டுப் பார்த்ததற்காகவே அவரைத் தாக்கினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவர் மனநலப் பாதிப்புடன் இருந்தாரா என்பதையும் மருத்துவ ரீதியாக உறுதி செய்த பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
அங்கு மாஜிஸ்திரேட் கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை பார்த்த சந்தோஷ் இந்த வண்டியை எங்கிருந்து எடுங்கள் எங்கே நிக்க வைத்தீர்கள் என்று உளறினார்.
ஆகவே அதை பார்த்தவர்கள் மனநோயாளி என்று சொன்னார்கள்.
இருந்த போதும் போலீசார் அவரை வாகன திருடன் என்று பட்டம் கட்டியது ஐயப்பாட்டை கிளப்பி உள்ளது.

admin
