பா.ஜ.க பிரமுகருக்கு கத்தி வெட்டு! திமுகவினர் மீது புகார்!!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு. திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு அமர்ந்து பாஜகவினர் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நியூ டவுன் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டது.
பாஜக நகர இளைஞரணி பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் இதில் தாக்கப்பட்டார்.
அவரை அரிவாளால் வெட்டிய பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த திமுக நகர இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட திமுக குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி பொதுசெயலாளர் ஜனார்த்தனன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.