ரொம்ப கம்மிங்க....தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதமும், மதுராந்தகம் தொகுதியில் 85.90 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரொம்ப கம்மிங்க....தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதமும், மதுராந்தகம் தொகுதியில் 85.90 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

செய்தி: ம.பா. கெஜராஜ்,,

தமிழகத்தில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதமும், மதுராந்தகம் தொகுதியில் 85.90 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

தாராபுரம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 89.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 80.31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் 92.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் 85.90 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இரு தொகுதிகளிலும் நடைபெற்றுள்ள இந்த இடைத்தேர்தல், ஆளும் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பெரும் அரசியல் சோதனையாக அமைந்துள்ளது.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட உள்ளதால், அன்றைய முடிவை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் காத்திருக்கின்றனர்.