விஜய் ஆட்சி சட்டவிரோதம் என்ற கருத்தை ஏற்கிறார்களா?

விஜய் ஆட்சி சட்டவிரோதம் என்ற கருத்தை ஏற்கிறார்களா?

செய்தி: ம.பா. கெஜராஜ்,

SIR-க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்ததால், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பதே சட்டவிரோதமானது என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அதே நாளில் காங்கிரஸ் கூட்டணியின் சந்திப்பில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஒருபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியே சட்டவிரோதம் என்றும், அக்கட்சியின் தலைவர் விஜய் சட்டவிரோதமாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார் என்றும் காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

மறுபுறம், அதே காங்கிரஸ் கூட்டணி நிகழ்வில் தவெக நிர்வாகிகள் பங்கேற்று அரசியல் உறவை வெளிப்படுத்தியிருப்பது முரண்பாடாக பார்க்கப்படுகிறது.

இதனால், “விஜய் தலைமையிலான ஆட்சி சட்டவிரோதம்” என்ற காங்கிரஸ் தரப்பின் கருத்தை தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொள்கிறதா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதா, அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதா என்பது ஒருபுறம் இருந்தாலும், தங்களது ஆட்சியின் சட்டப்பூர்வத் தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தவெக தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ... காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர்கள் யார் என்ற போட்டி தற்போது தி.மு.க.வுக்கும் தவெக.வுக்கும் இடையே நடைபெறுகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.