தொடர்ந்து வாகன நெரிசலில் சிக்கும் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை! பராக்கு பார்க்கும் போலீஸ்!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.2 மணி நேரத்திற்கும் மேலாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள். போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்காக தேசிய நெடுஞ்சாலையில் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
வார விடுமுறை தினம் என்பதால் பெங்களூரில் இருந்து சென்னை செல்வோரும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களும் அதிக அளவில் படையெடுத்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மின்னூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தொடர்ந்து அவ்வப்போது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலதாமதம் ஏற்படுவதால் மேம்பால பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் இது போன்ற பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மின்னூரில் மட்டும் இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு காவல் துறையினரே காரணம் என்பது வாகன ஓட்டிகளின் கருத்து.

admin
