ஆட்சியர் நடத்திய சம்பிரதாய ஆய்வு!

ஆட்சியர் நடத்திய சம்பிரதாய ஆய்வு!

கு.அசோக்,

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமுடன் செயல்பட வேண்டும் - ஆட்சியர் சந்திரகலா ஓட்டுநர்களுக்கு அறிவுரை..350 தனியார் பள்ளி கல்லூரி வாகன பேருந்துகளை நேரில் ஆய்வு.

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

   இந்த ஆய்வில், இராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் 350க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார்.

 அப்போது முதலுதவி பெட்டிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீதடுப்பான் கருவி, அவசரகால வழி, சிசிடிவி கேமரா படிக்கட்டுகளில் உயரம் காற்றோட்ட வசதி பிரேக் இன் தன்மை இருக்கையில் அமைப்பு ஆகிய வசதிகளை ஆய்வு செய்ததோடு ஓட்டுநர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

  இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்களிடையே பேசிய அவர், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

  இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான ஓட்டுநர்கள் பார்வையிட்டனர்.