திருப்பத்தூர் தர்மராஜா கோயில் கிருஷ்ண பெருமானுக்கு சிறப்பு வழிபாடு!

ஆ.ரமேஷ்,
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு தர்மராஜா கோயில் கிருஷ்ண பெருமானுக்கு சிறப்பு வழிபாடு.
திருப்பத்தூர் நகரம் தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜர் திருக்கோயில் கிருஷ்ண பெருமாள் சன்னதியில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா பெருமானுக்கு அலங்கார பெருவிழா நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு கோ பூஜை விஸ்வரூப தரிசனம் காலை 7.30 மணிக்கு திருப்பாவை சேவை நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ண பெருமானுக்கு இன்றைய சிறப்பு அலங்காரமாக பண்டரிபுரத்தில் ஆட்சி புரியும் ஸ்ரீ பண்டரி நாதர் அலங்காரம் செய்யப்பட்டு சர்வ தரிசனம் மற்றும் அர்ச்சனையுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.
புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளும் அருள்மிகு தர்மராஜா கோயில் கிருஷ்ண பெருமாள் சன்னதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.