கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

 கு.அசோக்,

 கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சி.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த மருதாலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.

 இந்நிலையில் இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது திடீரென மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து அவரது உடல்  பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

  இந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி திவ்யா(28), தனது மகன் திராவிட்(8), மகள் மித்ரா(5) ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் திவ்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 அவரது இரு குழந்தைகளுக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தொடர் விபத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தாலாமல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது