கணவனை கொலைகாரனாக மாற்றிய மனைவியின் கள்ள தொடர்பு!
கு.அசோக்,
அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் உறவுகளுக்குள் வெடித்த பூகம்பம் ஒரே இரவில் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய மூவரை கொடூரமாக கொன்ற இளைஞர்ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி செய்த துரோகத்தை தாங்க முடியாத ஆத்திரத்தில் வெறிச்செயல் செய்த விவசாயி கைது.
இராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அடுத்த புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு(30). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவருக்கும் காதல் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
பாலுவின் சித்தப்பா மகனான(பங்காளி) கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த விஜய்(26) என்பவருக்கும் பாலுவின் மனைவி புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த தவறான பழக்கத்தால் பாலுவுடன் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு, அவரை பிரிந்து புவனேஸ்வரி தன் தாய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
கடந்த முறை நடந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்த நிலையில் கடந்த 1 வருடமாக புவனேஸ்வரி, வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவர் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இருவரும் பிரிந்து வசித்து வரும் சூழலில், தற்போது புவனேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து பாலுவுக்கு கோபம் உச்சம் தலைக்க்கு ஏறியுள்ளது.
அந்த ஆத்திரத்தில் பாலு நேற்று இரவு முன்தினம் குடிபோதையில் தன் மனைவி புவனேஸ்வரியை கொல்ல திட்டமிட்டு, கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு புவனேஸ்வரி இவரை கண்டதும் ஓடி ஒளிந்து விடவே, ஆத்திரத்தில் தனது மாமியாரான பாரதியை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
பின்னர் பாலு, அடுத்ததாக தம்பியான விஜயை கொல்ல கொடைக்கல் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு விஜய் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவரது தந்தையான அண்ணாமலை(52) மற்றும் அவரது தாயான ராஜேஸ்வரி(45) ஆகியோரை இரும்புராடால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாலு வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பெயரில் வாலாஜாபேட்டை போலீசார் கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள அவரது மாமியார் பாரதி சடலத்தையும் கொண்டபாளையம் போலீசார் அவரது உறவினரான அண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

admin
