திமுகவின் தொங்கு சதை வேல்முருகன்! தவெக போஸ்டரால் பரபரப்பு!
கு.அசோக்,
திமுகவின் தொங்கு சதையான வேல்முருகனே வன்மையாக கண்டிக்கிறோம் என ராணிப்பேட்டையில் "தவெக" கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் அரசு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் அதிகமாக எடுத்த மாணவர்களை தவெக கட்சியின் தலைவர் விஜய் நேரில் அழைத்து அவர்களை பாராட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கிடையே தவெக கட்சியின் சார்பாக நடத்திய நிகழ்ச்சிகள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் பற்றியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் வாயிலாக கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த கருத்திற்கு தவெக கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதனை கண்டிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக கட்சியின் மேற்கு மாவட்டத்தின் சார்பாக வாலாஜா முத்துக்கடை நவல்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் "மன்னிப்பு கேள்" "மன்னிப்பு கேள்" எங்கள் உயிரினும் மேலான அண்ணன் தலைவரையும் சாதனை படைத்த மாணவிகளையும் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் இழிவாக பேசிய திமுகவில் தொங்கு சதையான வேல்முருகனை வன்மையாக கண்டிக்கின்றோம் என அச்சிடப்பட்டிருந்தது..
மேலும் வேல்முருகன் ஓடுவது போலும் மாணவர்கள் பின்னால் துரத்திச் சென்றவாறு காலணிகளை எரிந்தவாறு அதன் பின் மாணவர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் உள்ள புகைப்படம் ஆகிய இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளது.
தற்போது ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
