செக்ஸ் புகாரில் சிக்கிய அய்யருக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூரில் இளம் பெண் புகா£ன் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட அர்ச்சகருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியிடத்தில் பணிபுரிந்து வரும் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருக்கிறார்களாம்.

இந்நிலையில் நடந்த சம்பவம் இந்து சமய அறநிலைத்துறைக்கு அவப்பெயரையும் நாகநாத சுவாமி திருக்கோவிலுக்கு நற்பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நாகநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி அர்ச்சகர் தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் தான் தலைமறைவாக உள்ளாராமே?

admin
