2026 இல் 200 இடங்களில் திமுக வெல்லுமா? பகல் கனவு என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
கு.அசோக்,
திமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கினீர்கள் எத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ளீர்கள் - வேலைவாய்ப்புகளை பறிப்பது ஸ்டாலின் அரசு 2026 இல் 200 இடங்களில் திமுக வெற்றிபெறும் என ஸ்டாலின் கூறுவது பகல் கணவு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணத்தில் பேச்சு.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு வந்திருந்தார். அப்போது கட்சிக்காரர் நிகழ்ச்சியில் பேசுகையில், ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் திமுக கூட்டணி 200 இடங்களில் 2026 தேர்தலில் வெல்லும் என பேசிவருகிறார் அது பகல் கணவாகும்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இடம் பெறும். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்களை அதிமுக தான் உருவாக்கியது. இராணிப்பேட்டை திருப்பத்தூர் கூட நாங்கள் உருவாக்கிய புதியமாவட்டம். 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கால்நடை பூங்காக்கள் 6 சட்டக்கல்லூரிகள் வேளாண்மை கல்லூரிகள் என பல திட்டங்களை உருவாக்கினோம்.
ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக அரசு செயல்பட்டது ஆனால் 4 ஆண்டுகள் திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை அவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் அறிவிப்புடன் சரி அவர்கள் அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்கள்.
புதியதாக எதனையும் செய்யமாட்டார்கள் விவசாயிகள் பயன்பெற அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணியை கொண்டு வந்தோம் அதனை முடக்கியது திமுக அரசு.
ஏழை எளிய மக்கள் பயன்பெற 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம் அதனையும் முடக்கியது ஸ்டாலின் மாடல் அரசு.
வேலைவாய்ப்புகளை பறிப்பதே ஸ்டாலின் அரசு தான் திமுக அரசில் 2000 கோடிக்கு தடுப்பணைகள் கட்டுவதாக அறிவித்தார்கள் எத்தனை தடுப்பணையை கட்டியுள்ளனர்.
திமுக அரசு அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மன்னர் ஆட்சி வாரிசு அரசு மக்களை மறந்து திமுக ஆட்சி செய்கிறது அந்த ஊழல் அரசை அகற்ற வேண்டும்.
'நீட்'டை கொண்டு வந்ததே திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் அதனை ஒழிக்க நாங்கள் சட்டமன்றம் மூலம் நாடினோம் ஆனால் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இருப்பினும் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் நோக்கத்தில் 7.5 உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் 3460 பேர் மருத்துவம் படிக்கிறார்கள்.
திமுக எந்த பெரிய திட்டத்தினை நீங்கள் கொண்டு வந்தீர்கள் அதிமுக ஆட்சியில் ரயில்வே மேம்பாலங்கள் தடுப்பணைகள் சுகாதாரத்துறை முன்னேற்றம் என பல திட்டங்களை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம் வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் அதற்கு நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உடனிருந்தார்.

admin
