புனித மெக்கா செல்வதற்கும் அ.தி.மு.க. பாலிடிக்ஸா!

புனித மெக்கா செல்வதற்கும் அ.தி.மு.க. பாலிடிக்ஸா!

  ம.பா.கெஜராஜ்,

  புனித மெக்காவிற்கு செல்வதற்கும் அ.தி.மு.க.பாலிடிக்ஸ் குறுக்கே நிற்கிறதாம். குறிப்பாக முன்னாள அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிலோபர் கபில் ஆகியோரின் ஆதரவாளர்கள் முட்டைக்கட்டை போடுகிறார்களாம்.

 இது பற்றின விவரம் வருமாறு, 

  மெக்காவுக்கு ஆண்டுதோறும் முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்வர். அதற்கான ஏற்பாடுகளை செய்ய தமிழகத்தில் ஹஜ் கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமிக்கப்படுவர். தமிழக ஹஜ் கமிட்டியில் ஒன்பது பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, அதில் இருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தலைமையில் ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் இயங்குவர். இந்த பணிக்காக அரசு சம்பளம் வழங்கப்படாது. கமிட்டி கூட்டம் நடக்கும் போது படிகள் மட்டும் வழங்கப்படும். 

 ஹஜ் பயணியருக்கு, விமான கட்டண சலுகை உட்பட பல சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் ஹஜ் கமிட்டி வாயிலாக அளிக்கும்.

 இப்படிப்பட்ட ஹஜ் கமிட்டி உறுப்பினராக இருப்பது சமூகத்தில் மதிப்புக்குரிய பொறுப்பு என்பதால் அதை பணக்கார முஸ்லீம்கள் விரும்புவார்கள்.  இந்நிலையில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் ஏழு பேர் விலகி விட்டனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில், புதிதாக ஏழு உறுப்பினர்களை தி.மு.க., அரசு நியமித்தது. இருந்த போதும். கமிட்டி முழுமையாக இயங்க முடியவில்லை.

  அந்த வகையில், இதுவரை ஒரு முறை கூட கூட்டம் நடக்கவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோவை ஜப்பார் என்பவர் இந்த கமிட்டியில் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில்  தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகும் பதவி விலகவில்லை. அதே போல, அ.திமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் ஆதரவாளரும் உறுப்பினராக நீடிக்கிறார்.

     இவர்களின் பதவிக்காலம் ஒன்னும் ஓராண்டு இருப்பினும், கமிட்டியை கூட்ட வேண்டும் அல்லவா என்பது ஹஜ் செல்ல முயலும் பக்தர்களின் விருப்பம்.

  ஆனால் அ.தி.மு.க. சார்பாளர்களான அவர்கள் இருவரையும் அழைத்து, ஹஜ் கமிட்டி கூட்டம் நடத்த மற்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.